மூடு

உணவு பாதுகாப்பு துறை

உணவு பாதுகாப்பு மேலாண்மை என்பது உணவு வணிகம் செய்வதை சுகாதாரமான முறையிலும், பாதுகாப்பான முறையிலும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வணிகம் செய்வதை குறிக்கும். தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகதுறை 2006ன் படி 05.08.2011 முதல் செயல்பட்டு வருகிறது.

உணவு பாதுகாப்பு துறையின் செயல்பாடுகள்

இம்மாவட்டத்தில் உணவு வணிகர்கள், தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் மற்றும் உணவு விற்பனையாளர்கள் சுகாதாரமான முறையிலும் கலப்படமற்ற முறையிலும் தயாரித்து விற்பனை செய்கின்றனரா? என்று கண்காணிக்கப்பட்டு வருகிறது.

உணவு வணிகர்களின் பொறுப்புகள்

இத்துறையின் சட்டம் மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை உணவு தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், உணவு விற்பனையாளர்கள் மற்றும் உணவு பொருள் ஏற்றுமதி செய்பவர்கள் தெரிந்து வைத்திருப்பது ஒவ்வொரு உணவு வணிகர்களின் பொறுப்பாகும்.

உரிமம் / பதிவு ( உணவு வணிகர்கள்)

உரிமம்/பதிவு பெறாமல் எந்த உணவு வணிகரும் வணிகம் செய்யக்கூடாது. உணவு வணிகரின் வருட விற்பனை அளவு 12 லட்சத்திற்கு மேல் உள்ளவர்கள் இத்துறையின் சார்பாக வழங்கப்படும் உரிமம் பெறவேண்டும். உணவு வணிகரின் வருட விற்பனை அளவு 12 லட்சத்திற்கு கீழ் உள்ளவர்கள் இத்துறையின் சார்பாக வழங்கப்படும் பதிவு சான்றிதழ் கட்டாயமாக பெற்றிருக்க வேண்டும்.

உரிமம் வழங்கும் அதிகாரம் பெற்றவர்

மாவட்ட நியமன அலுவலர்: உணவு பொருள் விற்பனை செய்யும் அனைத்து உணவு வணிகர்களும் (வருடத்திற்கு ரூபாய் 12,00,000/- (பன்னிரண்டு லட்சத்திற்கு) மேல் விற்று கொள்முதல் செய்து வருபவர்கள்) உரிமம் கட்டணமாக சில்லறை விற்பனையாளருக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூபாய் 2,000/- (இரண்டாயிரமும்) தயாரிப்பாளர்கள் உற்பத்தி, நாள் ஒன்றுக்கு ஒரு மெட்ரிக் டன்னுக்கு உட்பட்டதா இருந்தால் ரூபாய் 3000/- (மூன்றாயிரமும்) ஒரு மெட்ரிக் டன்னுக்கு மேற்பட்டதாக இருந்தால் ரூபாய் 5000/- (ஐந்தாயிரமும்) இணையதளம் மூலமாக செலுத்தவேண்டும்.

பதிவு சான்றிதழ் வழங்கும் அதிகாரம் பெற்றவர்

உணவு பாதுகாப்பு அலுவலர் : பொருள் விற்பனை செய்யும் அனைத்து உணவு வணிகர்களும் (வருடத்திற்கு ரூபாய் பன்னிரண்டு லட்சத்திற்கு உட்பட்டு விற்றுகொள்முதல் செய்பவர்கள்) வருடத்திற்கு ரூபாய் 100/- (ரூபாய் நூறு மட்டும் கட்டணம் இணையதளம் மூலமாகவும் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம், மற்றும் பொதுசேவை மையங்கள் மூலமாகவும் பெற்றுகொள்ளலாம்.

உணவு பகுப்பாய்வு

இத்துறையில் பணிபுரியும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உணவு தயாரிக்கும் இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொள்வார்கள். உணவு தயாரிக்கும் இடங்கள் விற்பனைக்கா வைக்கப்பட்டுள்ள இடங்களில் சோதனை மேற்கொண்டு, உணவு பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா மற்றும் உணவில் கலப்பட பொருள் கண்டறிய ஆய்வு மேற்கொள்வார்கள். அவ்வாறு ஆய்வு மேற்கொண்டும் கலப்படம் உள்ள பொருட்களை கண்டறிந்து உணவு மாதிரி எடுக்கப்பட்டு ஆய்விற்காக உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

குற்றங்களும் மற்றும் அபராதங்களும்

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம், 2006-ன் படி உணவு பாதுகாப்பு அலுவலர்களால் எடுக்கப்படும் உணவு மாதிரிகளில் ஆய்வு அறிக்கையை அடிப்படையாக கொண்டு உரிய உணவு வணிகர்களை மாவட்ட நீதிவழியில் தீர்வு வழங்கும் அலுவலர் (DRO) முன் ஆஜர்படுத்தப்பட்டு மற்றும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உரிய அபராதம், உணவு பாதுகாப்பு தரநிர்ணய சட்டம் 2006 ன் கீழ் வழங்கப்படும்.

தொடர்பு அலுவலர் விவரம்
பெயர் / பதவி தொடர்பு எண் மின்னஞ்சல் முகவரி முகவரி
மாவட்ட நியமன அலுவலர் 8903117884 dofssakgi@gmail[dot]com மாவட்ட நியமன அலுவலர், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகதுறை, இரண்டாவது தளம், அறை எண். 128 மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கிருஷ்ணகிரி.

பொதுமக்ககள் உணவு தொடர்பான புகார்களுக்கு, புகார் தெரிவிக்க வேண்டிய Whatsapp Number: 9444042322.