திட்டங்கள்
சேவை வகை வாரியாக வடிகட்டி
சமுதாய முதலீட்டு நிதி
அமைக்கப்பட்டுள்ள தொழில் செய்யும் தகுதியான குழுக்களுக்கு VPRC மற்றும் PLF மூலம் ரூ.50,000/- வீதம் சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படுகிறது. திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் சமுதாய முதலீட்டு நிதி பெற 6 மாதம் நிறைவடைந்த சுய உதவிக் குழுவிற்கு தொழில் மேற்கொள்ள சுய உதவிக்குழு நுண்நிதி திட்டம் (Micro Credit Plan) தயார் செய்து அதன் அடிப்படையில் சமுதாய முதலீட்டு நிதி ஒவ்வொரு குழுவிற்கும் ரூ.50,000/- வீதம் பெறலாம். திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள் சமுதாய முதலீட்டு நிதியாக தலா ரூ.2 இலட்சம் வீதம் 155 கிராம ஊராட்சிகளில் உள்ள 620 சுய உதவிக்குழுக்களுக்கு மொத்தம் 3,10,00,000/-…
நலிவுற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு நிதி
நலிவுற்ற மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறு தொழில் துவங்க தனி நபர் சுழல் நிதி (VPRC) வழங்குதல். திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் கிராம சபாவில் அங்கீகாரம் பெற்றுள்ள நலிவுற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தனி நபர் கடன் தொழில் துவங்கிட வழங்குதல். திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள் கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் தீர்மானத்தின் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு வழங்கப்படுகிறது.
குழு ஆதார நிதி வழங்குதல்
இலக்கு மக்கள் குழுவிற்கு குழு ஆதார நிதி “கிராம வறுமை ஒழிப்புச் சங்கம்” (VPRC) மூலம் ரூ.15000 வீதம் குழுக்களுக்கு வழங்குதல். திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் குழு ஆதார நிதி பெற 3 மாதம் நிறைவடைந்திருக்க வேண்டும் முதற்கட்ட பயிற்சி முடித்திருக்கப்பட வேண்டும் திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள் கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் தர மதீப்பீட்டு குழுவினரைக் கொண்டு தரமதீப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் அமைத்தல்
கண்டறியப்பட்டுள்ள இலக்கு மக்களை கொண்டு கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் அமைத்தல். விடுப்பட்ட இலக்கு மக்களை வைத்து சுய உதவிக்குழு அமைத்தல். திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் 10-முதல் 20 நபர்களை கொண்டு கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் அமைத்தல். விடுப்பட்ட இலக்கு மக்களில் 18-60 வயது வரை உள்ளவர்களை கொண்டு சுய உதவி குழுக்கள் அமைத்தல். திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள் கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் திட்ட வழிகாட்டி நெறிமுறைகளின் படி அமைக்கப்பட்டு பயிற்சி முடித்தவுடன் நிதி உதவி வழங்கப்படுகிறது.
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம்
மாநிலத்தில் உள்ள இஸ்லாமியர்கள் பள்ளிவாசல்கள், தர்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைத்தாக்கள், ஆஷுர்கானாக்கள், முஸ்லிம் அனாதை இல்லங்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள், ஆசிரியைகள், மோதினார்கள், பிலால்கள், முஜாவர் உள்ளிட்ட பணியாளர்களின் பொருளாதார மற்றும் கல்வி நிலைகளின் மேம்பாட்டிற்காக உலமாக்கள் பணியாளர்கள் நல வாரியம் செயல்படுத்தப்பட்டு, இவ்வாரியத்தின் மூலம் இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய 18 வயது நிறைவு செய்தும் 60 வயதுக்குட்பட்ட உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் முஸ்லிம் மதத்தைச் சோந்து உலமாக்கள் மற்றம் பணியாளாகள் நல வாரியத்தில் உள்ளவாகள் மட்டும். திட்டத்தின் பயனை பெறுவதற்குகான…
சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை திட்டம் பற்றிய விளக்கம்
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கல்வி நிலையங்களிலும் ஒன்றாம் வகுப்பு முதல் தொழிற்கல்வி, ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் கிறித்தவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதங்களை சார்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு மைய அரசின் கீழ்கண்ட கல்வி உதவித்தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிப்படிப்பு – 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பள்ளி மேற்படிப்பு – 11 ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை தகுதி மற்றும் வருவாய் அடிப்படை – தொழிற்கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்வி திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்…
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பின்வரும் கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தனிநபர் கடன் திட்டம் சுய உதவி குழுக்கள் மூலம் சிறுகடன் வழங்கும் திட்டம் கல்விக் கடன் திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் சிறுபான்மையினா வகுப்பைச் சோந்தவாகள் மட்டும் பயன்பெற தகுதியானவாகள். திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள் மேலும் விவரங்களுக்கு மா.பி.ந. அலுவலகத்தை அணுகி பயனடையலாம்.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பின்வரும் கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொது காலக்கடன் திட்டம் கறவை மாடு (ஆவின்) சிறுகடன் திட்டம் (ஆண்களுக்கு) புதிய பொற்காலத் திட்டம் திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோந்தவாகள் பயன்பெறத் தகுதியானவாகள். திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள் மேலும் விவரங்களுக்கு மா.பி.ந. அலுவலகத்தை அணுகி பயனடையலாம்.
நரிக்குறவர் நல வாரியம்
நரிக்குறவர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு விபத்து நிவாரணம், கல்வி உதவித் தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை மற்றும் முதியோர் ஓய்வூதியம் ஆகிய நலத்திட்ட உதவிகள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்கள் மூலம் வழங்கப்படுகிறது. இது தவிர தொழில் தொடங்குவதற்கு மானிய உதவியும் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்கள் தனியாகத் தொழில் தொடங்க பதிவு செய்த உறுப்பினருக்கோ அல்லது அவரைச் சார்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட குடும்ப அங்கத்தினருக்கோ அதிக பட்சமாக ரூ.7500 (ரூபாய் ஏழாயிரத்து ஐநூறு மட்டும்) முழு மானியமாக நரிக்குறவர் நல வாரியம் மூலம்…
விலையில்லா தேய்ப்பு பெட்டி
சலவைத் தொழில்புரியும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு சுயதொழில் செய்து வருமானம் ஈட்டிட விலையில்லா சலவைப் பெட்டிகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் 1) பயனாளி மிபிவ இனத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும், பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-ம் ஆகும் திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள் மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி பயனடையலாம்.