ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள், புறக்கணித்தல் மற்றும் சுரண்டல்கள் ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடிய துன்புறும்சூழல்களைத் திறம்பட குறைந்து குழந்தைகளுக்கு விசாலமான, வலிமைமிக்க பாதுகாப்பான சூழ்நிலையை உறுதி செய்யும் நோக்கத்துடன் இத்திட்டம் ஏற்படுத்தப்பட்டது.
ICPS மாநில அளவில் மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் (SCPS) மற்றும் மாவட்ட அளவில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகாவும் (DCPU) செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இலக்கு பிரிவு
- பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகள் (CWC)
- சட்டத்திற்கு முரண்பட்ட இளஞ்சிறார்கள் (JJB)
- சட்டத்திற்கு தொடர்புள்ள குழந்தைகள்
வேலைபாடுகள்
- நிறுவனம் சார் : குழந்தைகள் இல்லங்களை மேற்பார்வையிடுதல்
- நிறுவனம் சாரா : முறையான தத்தெடுதல், நிதி ஆதரவு, பிற்காப்பு பராமரிப்பு மற்றும் வளர்த்து பராமரிப்பு
இதர செயல்பாடுகள்
- திறன் வளர்ப்பு பயிற்சி அளிப்பதன் மூலம் அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு குழந்தைகள் பாதுகாப்பு கட்டமைப்புகளை கொண்டு சிறந்த சேவைகளை வழங்குதல்.
- குழந்தைகள் தொடர்பான துறைகளான சுகாதாரம், கல்வி, சமூகநலம், ஊரக வளர்ச்சி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர், இளைஞர் நலம், காவல் துறை, நீதிமன்றம், தொழிலாளர் நலம் மற்றும் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் போன்ற அனைத்து துறைகளுக்கு இடையே தொடர்புகளை ஏற்படுத்தி ஒருங்கிணைத்து செயல்படுத்துதல்.
- மாவட்ட, வட்டார மற்றும் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பில் இளைஞர்களின் பங்களிப்பை ஊக்கப்படுத்துதல்.
- குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பணிபுரியும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைந்து செயல்பட வைத்தல்.
- குழந்தைகள் தொடர்புடைய துறையினருக்கு IEC Material தயாரித்து வழங்குதல்.
- சிறப்பான குழந்தைகள் பாதுகாப்பு சேவைகளை உறுதிப்படுத்துதல்.
- மக்களிடையே குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.