பள்ளிக் கல்வித் துறை
மடிக்கணினி
2011-12 ஆம் கல்வியொண்டு மு ல் அரசு மற்றும் அரசு உ தவி பெறும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப் டுகிறது.
சிறப்பு ஊக்கத் தொகை
அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ /மாணவியர்கள் இடைநிலைக் கல்வியில் இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் 2011-12 ஆம் ஆண்டு முதல் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்ளுக்கு ரூ.1500, 11 ஆம் வகுப்பு யிலும் 10 மாணவர்களுக்கு ரூ.1500, 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ரூ.2000 னை சிறப்பு ஊக்கத் தொகை தமிழ்நாடு மின் விசை நிதி நிறுவைத்தில் முதலீடு செய்யப்பட்டு மேல்நிலைக் கல்வி முடிவடைந்தவுடன் வழங்கப் டுகிறது.
நான்கு இணைச் சீருடைகள்
அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் சத்துணவு உண்ணும் மாணவர்கள் அனைவருக்கும் 4 இணை சீருடைகள் வழங்கப்படுகிறது இத்திட்டம்
கம்பளிச் சட்டை
மலைப் பகுதியில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலும் பயிலும் மாணவர்களுக்கு 2013-14 ஆம் கல்வி ஆண்டு முதல் விலையில்லா கம்பளிச் சட்டை வழங்கப்படுகிறது.
பாடப்புத்தகங்கள்
அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 மு ல் 12 ஆம் வகுப்பு வரையிலும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகிறது. 2012-13 முதல் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு மற்றும் முப்பருவ முறை அறிமுகப் படுத்தப் பட்டதையடுத்து, 1 முதல் 9 ஆம் வகுப்பு வகுப்பு வரையிலும் மாணவர்களுக்கு பருவம் I, பருவம் II, பருவம் III என முப்ருவ முறையிலும் மற்றும் 10 மு ல் 12 ஆம் வகுப்பு வரையிலும் அனைத்து மாணவர்களுக்கும் முழு ஆண்டுக்குமான பாடபுத்தகங்கள் வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு இப்புத்தகங்களை ஒவ்வொரு கல்வி ஆண்டும் / பருவமும் பள்ளி தொடங்கும் முதல் நாளிலே வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பேடுகள்
முதல் 10 ஆம் வகுப்பு வரையிலும் மாணவர்களுக்கு 2012-13 ஆம் கல்வி ஆண்டு முதல் வழங்கப் பட்டு வருகிறது.
கல்வி உபகரணப் பொருட்கள்
விலையில்லா புவியியல் வரைபடம்
2012-13 ஆம் கல்வியாண்டு முதல் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலும் மாணவர்களுக்கு விலையில்லா புவியியல் வரைபடம் வழங்கப்படுகிறது.
புத்தகப்பை
2012-13 கல்வியாண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவிபறும் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலும் மாணவர்களுக்கு விலையில்லா புத்தகப்பை வழங்கப்படுகிறது.
கிரையான் வண்ணப் பென்சில்கள்
2012-13 ஆம் கல்வியாண்டு முதல் 1 மற்றும் 2 ஆம் வகுப்பு வரையிலும் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா கிரயொன்கள் மற்றும் 3 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலும் மாணவர்களுக்கு வண்ணக பென்சில்கள் வழங்கப் படுகிறது.
கணித உபகரணப் பெட்டிகள்
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலும் பயிலும் மாணவர்களுக்கு 2012-13 ஆம் கல்வி ஆண்டு முதல் விலையில்லாக் கணித உபகரணப் பெட்டிகள் வழங்கப் பட்டு வருகின்றன.
காலணி
அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலும் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு 2012-13 ஆம் கல்வியாண்டு முதல் காலணி வழங்கப்படுகிறது.
மிதிவண்டிகள் வழங்குதல்
ஆண்டுதொறும் அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வாயிலாக மாணவர்களுக்கும் ஆதிதிராவிட நலத் துறை வாயிலாக மாணவர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை வாயிலாக பொதுப் பிரிவு மாணவர்களுக்கும் வழங்கப் படுகிறது.
புரட்சித் கலவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம்
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத்திட்டத்தின் கீழ், 1 மு ல் 10 ஆம் வகுப்பு வரையிலும் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டுவருகிறது. இத்திட்டம் சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத் துறையின் மூலம் செயல் படுத்தப்படுகிறது.
பேருந்து பயண அட்டை
1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தாங்கள் பயிலும் பள்ளிக்கு எளிதில் வந்து செல்லவற்கு வசதியாக பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டு வருகின்றது. இத்திட்டம் போக்குவரத்து துறைமூலம் செயல் படுத்தப்படுகிறது.
வருவாய் ஈட்டும் தாய்/தந்தைகளை இழந்த மாணவர்களுக்கான துயர் துடைப்பு நிதி உதவி
மரணமடைந்த அல்லது விபத்து காரணமாக நிரந்தர முடக்கம் அடைந்ததன் காரணமாக வருவாய் ஈட்டும் பெற்றோரை (தாய் / தந்தை) இழக்க நேரிடும் மாணவர்களுக்கு துயர் துடைப்பு நிதியுதவித் திட்டமாகும். இவ்வாறான எதிர்பாராத சூழ்நிலையைனால் குழந்தைகளின் கல்வி எவ்விதத்திலும் பாதிக்கக் கூடாது என்பதில் அரசு தீவிரமாக உள்ளது. அரசு மற்றும் அரசு நிதியு விதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ.50,000 நிதி உதவிதொகை அளிக்கப்பட்டு வந்தது. 2014-15 ஆம் ஆண்டு முதல் இந்நிதியுவித் தொகை ரூ.50,000 யிலிருந்து ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இத்தொகையொனது மொணவர்களின் பெயரில் பொதுத் துறை நிறுவனத்தில் வைப்பு நிதியாக செலுத்தப்படுகிறது.
வேலை வாய்ப்பிற்கான பதிவு
2011-12 ஆம் ஆண்டு முதல் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்து செல்லும் மாணவர்கள் தங்களின் சன்றிதழ்களை வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்து அவர்களின் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச்சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு பதிவு அட்டையயும் சேர்த்து பள்ளியிலேயே பெற்றுக்கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது. இப்பதிவு முறையினால் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் சான்றிதழ்கள் 100 சதவீதம் வேலைவாய்ப்பு அலுவலத்தில் பதிவு செய்யப்படுவது உறுதி செய்யப்படுகின்றது.
சாதி, இருப்பிட மற்றும் வருமானச் சான்று வழங்குதல்
10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்குப் பள்ளித் தலைமை ஆசிரியர் மூலமாக சார்ந்த வருவாய் வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியரிடமிருந்து சாதி, இருப்பிட வருமானச் சான்றுடன் பெற்று வழங்கப்படுகின்றன. 2013-14 ஆம் ஆண்டு முதல் 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 2015- 16 ஆம் கல்வியாண்டு முதல் இணைய வழியில் விண்ணப்பம் பெறப்பட்டு இச்சான்றிதழ்கள் வழங்கப்படுவது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மழைக்கால ஆடை உறைக்காலணி மற்றும் காலுறை
மலைப்பிரதேசங்களில் வாழும் மாணக்கர்கள் மழைக்காலங்களில் எவ்வித சிரமும் இன்றி பள்ளிக்கு வருகை புரியு வேண்டும் என்னும் குறிக்கோளுடன் மழைக்கால ஆடை உறைக்காலணி மற்றும் காலுறைகள் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
பெயர் / பதவி | தொடர்பு எண் | மின்னஞ்சல் முகவரி | முகவரி |
---|---|---|---|
மாவட்டக் கல்வி அலுவலர், கிருஷ்ணகிரி | 04343-236698 | deokgi@nic[dot]in | மாவட்டக் கல்வி அலுவலகம், அரசு ஆண்கள் மேநிலைப் பள்ளி வளாகம், காந்தி சாலை, கிருஷ்ணகிரி- 635001 |
மாவட்டக் கல்வி அலுவலர், ஓசூர் | 04344-223644 | deoosr@nic[dot]in | மாவட்டக் கல்வி அலுவலகம், அரசு உயர்நிலைப் பள்ளி வளாகம், முல்லை நகர், இராக்கோட்டை சாலை, ஓசூர்- 6351039 |
மாவட்டக் கல்வி அலுவலர், மத்தூர் | 9788315591 | deomathur2@gmail[dot]com | மாவட்டக் கல்வி அலுவலகம், அரசு ஆண்கள் மேநிலைப் பள்ளி வளாகம், மத்தூர் – 635203, கிருஷ்ணகிரி மாவட்டம் |
மாவட்டக் கல்வி அலுவலர், தேன்கனிக்கோட்டை | 9442855738 | deodkottai@gmail[dot]com | அரசு (தெலுங்கு) தொடக்கப் பள்ளி வளாகம், பட்டாளம்மன் தெரு, தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி-635107 |