மூடு

கல்வி உதவித் தொகை திட்டங்கள்

| துறை: பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ மாணவியருக்கு பின்வரும் திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

பள்ளி படிப்பு உதவித் தொகை

பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூ.2,00,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மற்றும் குடும்பத்தில் பட்டதாரி எவரும் இருக்கக்கூடாது என்ற நிபந்தனைகளுக்குட்பட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சார்ந்த 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு கற்பிப்பு கட்டணம் ஆண்டுக்கு ரூ.200 என்ற அளவிலும் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு ரூ.250 என்ற அளவிலும் வழங்கப்படுகிறது.

பள்ளி மேற்படிப்பு உதவித்தொகை

பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூ.2,00,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மற்றும் குடும்பத்தில் பட்டதாரி எவரும் இருக்கக்கூடாது என்ற நிபந்தனைகளுக்குட்பட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் ஆங்கில வழிக் கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்த மாணவ மாணவியருக்கு ஆண்டுக்கு ரூ 500 கற்பிப்பு கட்டணமாக வழங்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் ஆங்கில வழிக் கல்வி பயிலும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு கற்பிப்பு கட்டணம் மேலே குறிப்பிடப்பட்ட அளவில் எவ்வித நிபந்தனையுமின்றி வழங்கப்டுகிறது.

இணையவழி மூலம் பட்டப் படிப்பிற்கான கல்வி உதவித்தொகை

  • மூன்றாண்டு கலை மற்றும் அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு இலவச கல்வி உதவித் தொகை திட்டம்
  • பாலிடெக்னிக்குகளில் மூன்று வருட பட்டயப் படிப்புகளுக்கு இலவசக் கல்வி உதவித் தொகை திட்டம்
  • தொழிற் கல்வி படிப்புகளுக்கு இலவசக் கல்வி உதவித் தொகை திட்டம்

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் பெறத் தகுதி பெற்றவர்கள்.

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள்

மேற்படி கல்வி உதவித்தொகைகளை பெற உரிய கல்லூரி முதல்வர்கள் மூலம் இணையதளத்தில் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.

இணையதளம்

கல்வி உதவித் தொகை

பயனாளி:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள்

பயன்கள்:

கல்வி உதவித்தொகை