மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம்
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கீழ் இயங்கி வருகிறது. இவ்வலுவலகத்திற்கு வரும் மனுதாரர்களுக்கு அவர்களுடைய கல்வி தகுதியினை பதிவு செய்தல், வேலைவாய்ப்பு அடையாள அட்டையை புதுப்பித்து தருதல், முன்னுரிமை பதிவு செய்தல், பதிவு உள்வருகை, பதிவு வெளிச்செல்லல், முகவரி மாற்றம், வேலைநிலவரத் தகவல் பிரிவு, தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு போட்டித்தேர்வு வகுப்பு நடத்துதல், பதிவு மூப்பு அடிப்படையில் பரிந்துரைத்தல், படித்த வேலைவாய்ப்பற்றோர் இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்குதல், திறன்பயிற்சி வழங்க பதிவு செய்தல், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தி உடனடியாக பணிநியமன ஆணைகள் வழங்குதல் போன்ற பணிகள் நடைபெறுகிறது.
மனுதாரர்கள் தங்களுடைய கல்வித்தகுதியை பதிவு செய்ய www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். வேலையளிப்பவர்கள் மற்றும் வேலைநாடுநர்கள் தனியார் துறை வேலைவாய்ப்புக்காக www.ncs.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்படுபவர்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டை இரத்து செய்யப்படமாட்டாது.
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டம்
படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் இளைஞர்களின் நலனுக்காக, மாதம் ஒன்றுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200/-ம், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300/-ம், மேனிலைக் கல்வியில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு ரூ. 400/-ம், மற்றும் இளநிலை பட்டதாரிகளுக்கு ரூ.600/-ம் வீதம் மூன்றாண்டு காலத்திற்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளை பொருத்தமட்டில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு செய்துள்ள பதிவுதாரர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முறையே ரூ.600/-, ரூ.750/-, ரூ.1000/- வீதம் மாதம் ஒன்றுக்கு வழங்கப்படுகிறது. (கிருஷ்ணகிரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகத்தின்மூலம் உதவித்தொகை பெற்றிருந்தால் பதிவுதாரர்கள் இவ்வலுவலகத்தின்மூலம் வழங்கப்படும் உதவித்தொகை பெறக்கூடாது).
தகுதி | மாற்று திறனாளி நபர் ஒருவருக்கு உதவி (மாதத்திற்கு) ரூ. | மற்றவர்களுக்கான உதவி (ரூ.) |
---|---|---|
பிஎஸ்எஸ்எல்சி | 600 | 200 |
எஸ்எஸ்எல்சி | 600 | 300 |
ஹச்எஸ்சி | 750 | 400 |
பட்டப்படிப்பு | 1000 | 600 |
மாற்று திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் மற்றவர்களுக்கு 3 ஆண்டுகள் உதவி வழங்கப்படும்.
திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்
இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோரை பொறுத்த மட்டில் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற உச்ச வயதுவரம்பு கிடையாது. தொடர்ந்து 10 ஆண்டுகள் அல்லது வேலைவாய்ப்பு கிடைக்கும்வரை உதவித்தொகை வழங்கப்படும். இத்திட்டத்தில் அனுமதிக்கும்போதோ அல்லது அனுமதித்தப்பின்னரோ பயனாளிகள் 45 வயது கடந்தவராக இருப்பின் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வுதியம் ஏதும் பெறவில்லை என சான்று ஆண்டுதோறும் அளிக்கப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை 10 ஆண்டுகள் உதவித்தொகை பெறதகுதியானவர்கள். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50,000/- க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
பெயர் / பதவி | தொடர்பு எண் | மின்னஞ்சல் முகவரி | முகவரி |
---|---|---|---|
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் | 04343 – 236189 | deoemploy[dot]krish@gmail[dot]com | மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கிருஷ்ணகிரி. |