மூடு

விவசாய துறை

சேவை வகை வாரியாக வடிகட்டி

வடிகட்டி

வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா)

அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த துறைகளில் உள்ள தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு கொண்டு சேர்ப்பது ஆகும். மேலும், அட்மா திட்டத்தின் வாயிலாக இதர துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களையும் ஒருங்கிணைத்து விவசாயிகளுக்கு கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கம். அட்மா திட்டத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பட்டுவளர்ச்சித்துறை, மீன் வளர்ப்புத்துறை, வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஆகிய துறைகள் ஒன்றிணைந்து அவ்வப்போது விவசாயிகளுக்கு பயிற்சி, கண்டுனர்தல் சுற்றுலா, செயல்விளக்கங்கள், பண்ணைப்பள்ளி மற்றும் வெளிமாநில சுற்றுலாக்களின் மூலம் விவசாயிகளுக்கு புதிய…

வெளியிடப்பட்ட தேதி: 14/06/2018
விவரங்களை பார்க்க

மண்வள அட்டை இயக்கம்

மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து “மண்வள அட்டை இயக்கம்” எனும் புதிய இயக்கத்தினை 2015 -16ம் ஆண்டு தொடங்கி அனைத்து விவசாயிகளும் பயனடையும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் நிகர சாகுபடி பரப்பில் நிலையான நீர்ப்பாசன வசதி 58385 ஹெக்டேர், மானாவரி பரப்பு 1,27,370 ஹெக்டர் மொத்தம் 1,85,675 ஹெக்டர் பரப்பளவில் 10 வட்டாரங்கள் பயன்பெறும் வகையில் மண் மாதிரிகள் சேகரம் செய்யப்பட்டு வருகிறது. நிலையான நீர்ப்பாசன வசதியுள்ள நிலத்தில் 2.5 ஹெக்டேருக்கு ஒரு மண் மாதிரியும் மானாவரி நிலப்பரப்பில் 10 ஹெக்டேருக்கு ஒரு மண் மாதிரியும் மொத்தம் 37340 மாதிரிகள் இத்திட்டத்தில் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது….

வெளியிடப்பட்ட தேதி: 14/06/2018
விவரங்களை பார்க்க

பிரதம மந்தரி பயிர் காப்பீட்டு திட்டம்

பிரதம மந்தரி பயிர் காப்பீட்டு திட்டம் மூலமாக, விவசாயிகள் நீடித்த நிலையான விவசாயம் மேற்கொள்ள கீழ்க்கண்ட வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. நோக்கம் அசாதாரன சூழ்நிலைகளால் விவசாயிகளுக்கு பயிர் இழப்பு மற்றும் பயிர் பாதிப்பு ஏற்படும் போது நிதி உதவி வழங்குதல். விவசாயிகளுக்கு புதிய மற்றும் நவீன தொழில்நுட்பங்களை எடுத்துரைத்து உற்பத்தியை மேம்படுத்த செய்தல். தொடர்ந்து விவசாயம் செய்வதன் மூலம் நிலையான வருமானத்தைப் பெற விவசாயிகளுக்கு வழிவகை செய்தல். திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் பிரதம மந்தரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகள் தகுதியுடையவர்கள்.

வெளியிடப்பட்ட தேதி: 14/06/2018
விவரங்களை பார்க்க