மூடு

மாவட்ட ஆட்சியர் விபரக்குறிப்பு

Collector Prabakar

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாக நடுவர்
மருத்துவர் சு.பிரபாகர், இ.ஆ.ப., அவர்கள் 2009 ஆம் ஆண்டுக்குரிய இந்திய ஆட்சிப் பணியைச் சேர்ந்தவராவர்.
இவரது சொந்த மாவட்டம், தமிழ்நாட்டில் உள்ள சேலம் மாவட்டம் ஆகும். இவர் தனது கால்நடை அறிவியலில் முதுகலைப் பட்டத்தினை சென்னை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் பெற்றார். இவர் அறிந்த மொழிகள்- தமிழ் ஆங்கிலம். கால்நடைகளில் மைக்கோடொசின்ஸ் குறித்த நோய்க்குறியியல் மற்றும் ஆய்வுப் பணிகளில் நிபுணத்துவம் பெற்றவர். இந்திய கால்நடை நோய்க்குறியியல் நாளேட்டில் 5 ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். சுனாமி, மீட்பு பணிகளில் கடலூர் மற்றும் சென்னையில் பணியாற்றியுள்ளார். உலக தமிழ் செம்மொழி மாநாடு, 2010 கோயம்புத்தூரில் நடைபெற்ற போது சிறப்புப் பணி அலுவலராகப் பணியாற்றியுள்ளார். இவர் ஈரோடு மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக 30/08/2018 அன்று பதவியேற்றுள்ளார்.